அமெரிக்காவில் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசின் வெளிவிவகார கொள்கைகள் அனைத்தும் தெளிவற்ற நிலையில் இருக்கும் சூழலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைமை பொறுப்புக்கு வர முயற்சி மேற்கொண்டுள்ளது டிரம்ப் அரசு.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 11 ஆண்டு கால வரலாற்றில் பல முறை அதன் நோக்கங்கள் குறித்து பல்வேறு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன. ஆனாலும் 47 உறுப்பினர்கள் கொண்ட மனித உரிமைகள் பேரவை இதுவரை திறம்பட செயல்பட்டு வந்துள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அரசின் பிரதிநிதி பரித்துரைத்துள்ள பல விவகாரங்களையும் மனித உரிமைகள் பேரவை முக்கியத்துவம் அளித்து விவாதித்துள்ளது. இதில் வட கொரியாவின் அத்துமீறல்கள், பர்மா, இலங்கை மற்றும் தெற்கு சுடான் உள்ளிட்ட நாடுகளின் அரசியல் சமூக விவகாரங்கள் உள்ளடங்கும்.
டிரம்ப் அரசின் இதுவரையான செயல்பாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கோ அல்லது மனித உரிமைகளுக்கோ நன்மைபயக்காது என சமூக ஆர்வலர்கள் கருத்துரைத்துள்ளனர்.
மட்டுமின்றி தற்போதுள்ள நிலையில் மனித உரிமைகள் பேரவையின் தலைமை பொறுப்புக்கு அமெரிக்கா வருவது கவலையளிக்கும் விவகாரம் என சமூக ஆர்வலர்களால் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மனித உரிமைகள் பேரவை 2006 ஆம் ஆண்டு உருவான போனது அப்போதைய புஷ் அரசு உறுப்பினர் ஆவதற்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் 2009 ஆம் ஆண்டு முதன்முறையாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினராக இடம் பிடித்தது.
தற்போது பேரவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் 2019 ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதை அடுத்து மீண்டும் கைப்பற்ற டிரம்ப் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.