மாத்தறை – பங்கம பிரதேசத்தில் தடியால் தலையில் தாக்கி தாயை கொன்ற 28 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்கம பிரதேச வீட்டில் வசித்து வந்த சந்திரலதா என்ற 59 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டு அங்கொட மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பெண்ணின் சடலம்
உயிரிழந்த பெண்ணின் சடலம் கிராம மக்களால் அக்குரஸ்ஸ மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னர், வீட்டிலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர், அப்பகுதியிலுள்ள வெறிச்சோடிய வீடொன்றில் மறைந்திருந்த போது பங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலைய அதிகாரி
பங்கம பொலிஸ் நிலைய அதிகாரி தலைமையிலான குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.