Loading...
புரட்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மக்களின் அஞ்சலியுடன் கரைச்சிப் பிரதேச செயலகத்திலிருந்து இறுதிக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பாடகர் சாந்தனின் இறுதி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
நீண்ட காலாமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதியுற்றுவந்த பாடகர் சாந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...
Loading...