நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் ஆறாம் திகதிக்கு பின்னரே குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என இன்று காலை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நாட்டில் காற்றின் வேகமும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டில் ஒரு பகுதிக்கு மழையுடனான காலநிலை நிலவினாலும் எம்பிலிபிடிய மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் தற்போது வறட்சியால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் உடவலவ நீர்தேக்கத்தில் மிகவும் குறைந்த கொள்ளவிலான நீர் மட்டமே காணப்படுவதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.