கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பாவனா படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகை பாவனா அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முதலில் மிகவும் சிரமப்பட்டு உள்ளார். அதன்பிறகு துணிச்சலாக போலீசில் புகார் செய்தார். மேலும் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
தற்போது அவர் இதுதொடர்பாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தனக்கு நேர்ந்த சோதனைகளை பற்றி அவர் கருத்து பதிவும் செய்துள்ளார். அதில், வாழ்க்கையில் சில நேரம் நான் கீழே விழுந்திருக்கிறேன். எனக்கு வருத்தங்களும், தோல்விகளும் ஏற்பட்டுள்ளது. அதை திரும்பி பார்க்க நான் ஒருபோதும் விரும்பவில்லை.
என் வாழ்க்கையில் ஏற்பட்ட வருத்தங்கள், தோல்விகளில் இருந்து மீண்டு வருவேன் என்று உறுதியாக நம்பினேன். இப்போதும் அதுபோல தடைகளை தாண்டி எழுந்து வருவேன் என்று குறிப்பிட்டு உள்ளார். நடிகை பாவனாவின் இந்த துணிச்சலான பதிவிற்கு மலையாள நடிகர் பிருதிவிராஜ் உள்பட பலர் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.