தென்னாபிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை மறித்து பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு குழு திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
18 பேர் உயிரிழந்தனர்
அப்போது திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, காவல்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த 16 ஆண்கள், 2 பெண்கள் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.