முதலில் ஆடிய இங்கிலாந்து 198 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து 103 ரன்கள் எடுத்து தோற்றது.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அதிரடியாக ஆடி 198 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் 60 பந்தில் 84 ரன்னும், ஹாரி புரூக் 36 பந்தில் 67 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது.
இறுதியில், நியூசிலாந்து அணி 103 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் டி20 தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பேர்ஸ்டோவ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டி நாளை நடைபெற இருக்கிறது.