Loading...
கேப்பாப்புலவு – பிலவுக் குடியிருப்பு மக்களின் காணிகளை இன்று காலை நில அளவைத் திணைக்களத்தினர் காணிகளை அளவீடு செய்துள்ளதாகவும், அம்மக்களின் காணிகள் நாளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் க. குணபாலன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த மக்கள் தற்காலிகமாக குடியேற்றப்பட்ட கேப்பாப்புலவு மாதிரிக் கிராமம் அரசாங்கத்தினால் மீளப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...
இந்நிலையில் பிலவுக்குடியிருப்புக்குச் சொந்தமான 84குடும்பங்களிற்குச் சொந்தமான காணியை நாளை முற்பகல் 11.00 மணிக்கு அம்மக்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...