ருமேனியாவுடனான எல்லையிலுள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரை இலக்குவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது.
டனீயூப் ஆற்றுடனான துறைமுக கட்டமைப்புக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றரை மணித்தியாலங்கள் தாக்குதல்
உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரில் மூன்றரை மணித்தியாலங்கள் வரை ரஷ்யாவின் தாக்குதல்கள் நீடித்ததாக கீயேவ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஈரானிய தயாரிப்பான ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி இந்த தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதல்களுக்கு அனுப்பட்ட 25 ஆளில்லா விமானங்களில் 22 தமது வான் பாதுகாப்பு கட்டமைப்பினால் தாக்கி அழிக்கப்பட்டு்ளளதாக உக்ரைன் கூறியுள்ளது.
இந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் குடிசார் உட்கட்டமைப்புகளே சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் தெற்கு இராணுவ கட்டளை மையம் கூறியுள்ளது.