Loading...
உள்நாட்டு எரிவாயு சிலரிண்டரின் விலை உயர்வை லிட்ரோ எரிவாயு நிறுவனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
விலை திருத்தங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தற்போது இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 145 ரூபாய் அதிகரித்து புதிய விலை 3,127 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதேநேரம் 5 கிலோ சிலிண்டரின் விலை 58 ரூபாய் அதிகரித்து புதிய விலை 1,256 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2.3 கிலோ சிலிண்டர் 26 ரூபாய் அதிகரித்து புதிய விலை 587 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Loading...