2009ம் ஆண்டு போரின் போது இலங்கை அரசு செய்த மனிதப் படுகொலைகளை விசாரிக்கவேண்டும். 8 ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசு காலத்தை கடத்தி வருகிறது என்று உலக நாடுகளே குறை கூறி வருகிறது. ஐ.நா மனித உரிமை சபையும் இதனையே கூறிவருகிறது. இதனை துருப்பு சீட்டாக வைத்தே தமிழர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு. ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி தேவை என்று போராடி வருகிறார்கள். ஆனால் நக்கிப் பிழைக்கும் இந்த சம்பந்தன், பிரான்ஸ் தூதுக் குழுவிடம் இலங்கைக்கு இன்னும் கொஞ்சக் காலம் அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சி கூத்தாடியுள்ளார்.
இலங்கை அரசை காப்பாற்றும் நோக்கில், இவர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு தமிழ் மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பும் என்று அவருக்கு நன்றாக தெரியும். அதனால் அவர் கீழ் காணும் விதத்தில் இதனை , ஒரு வடிவில் சொல்லியுள்ளார்: அதாவது ,
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு மீணடும் கால அவகாசத்தை வழங்குவதாயின் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கடுமையான நிபந்தனைகளின் கீழேயே கால அவகாசம் வழங்கப்படவேண்டும்
எனவே இலங்கையின் முக்கிய எதிர்கட்சியும், தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியுமான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு. எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. இலங்கைக்கு இன்னும் கால அவகாசத்தை கொடுக்கலாம். அவர்கள் செய்த கொலையை இன்னும் இழுத்தடித்து அதற்கு விசாரணை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்யலாம். சம்பந்தரும் இதற்கு உடந்தை… சட்ட ஆலோசகர் மற்றும் அமெரிக்க உளவுத்துறையின் பிடியில் உள்ள சுமந்திரனும் இதற்கு சப்போட். தமிழ் இனம் எங்கே போய்கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை.