Loading...
முதுகில் செடில் குத்தி 10 கடல் மைல் தூரம் கடலில் படகினை இழுத்து செல்வா விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த சாண்டோ வீரர் பிரமசிவன் விமலன் சாதனை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் – குடத்தனை வடக்கு அன்னை வேளாங்கன்னி ஆலய திருநாளை முன்னிட்டு செல்வா விளையாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் குறித்த படகிழுத்தல் நிகழ்வு நேற்று (06.09.2023) புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.
Loading...
10 கடல் மைல் தூரம்
குடத்தனை வடக்கு கடற்கரையில் இருந்து சுப்பரமடம் கடற்கரை வரையான சுமார் 10 கடல் மைல் தூரத்திற்கு இவ்வாறு முதுகில் செடில் குத்தி படகினை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த சாதனை நிகழ்வு காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த முற்பகல் 09:15 மணிக்கு நிறைவுபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading...