யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சமுர்த்தி உத்தியோகத்தர் என தன்னை அறிமுகம் செய்து வீதியால் செல்வோரிடம் உதவித் திட்டம் தருவதாகப் பேசி நகைகளை அபகரித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 10 பவுண் கொள்ளையிடப்பட்ட நகைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை சுன்னாகம் பகுதியில் இவ்வாறு நான்கு சம்பவஙகளுடன் அவர் தொடர்புபட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணம் மாநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சீரமைப்பு வேலைகள் இடம்பெற்ற வேளை 6 லட்சம் பெறுமதியான வீட்டு உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து திருடப்பட்ட வீட்டு குளியறை உபகரணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.