வடக்கு மாகாண முதலமைச்சர் உடல் நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது நலமாக இருப்பதாக க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போது தான் நலமாக இருப்பதாகவும், சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளதாகவும் வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது என்றும், தனது வேலைகளை இப்போது தாமே செய்வருவதாகவும் கூறியுள்ளார்.
முதல்வரின் உடல்நலம் குறித்து நேற்று சிங்கள ஊடகம் ஒன்று தவறான செய்தியை பிரசுரித்திருந்தது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் முதல்வரின் உடல்நிலை தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், சில ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல் தவறானதென குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறான தகவல்களை பரப்ப வேண்டாமெனவும் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.