Loading...
8 வயதான யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியின் கை அகற்றப்பட்டமைக்கு நீதி விசாரணை வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்வியிலும், இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் மிகுந்த ஆர்வமும் திறமையுமுள்ள மாணவிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
இது திட்டமிட்ட செயல் அல்லாவிட்டாலும் மருத்துவத்துறைக்கு இழுக்கான விடயம் என்றும் கை அகற்றப்பட்ட விடயம் அக்குழந்தையின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அச்சங்கம் கூறியுள்ளது.
இது போன்ற தவறுகள் இனியும் நடைபெறக்கூடாது என்பதற்காக முறையான நீதி விசாரணை நடாத்தப்பட்டு தவறுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
Loading...