தெற்காசியாவின் கல்வித் துறையின் கேந்திர மையமாக இலங்கையை மாற்றும் வேலைத்திட்டம் அமுலாவதாக ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கல்வியின்றி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. புத்திஜீவிகளைக் கொண்ட மனித வளத்தை கொண்டே முன்னேற முடியும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 வருடங்களின் பின்னர் 63 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
பௌதீக வளங்கள்
அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றிருந்தாலும் சகலரையும் இணைத்துக் கொள்வதற்கான பௌதீக வளங்கள் நாட்டில் இல்லையென்றும் அவர் கூறினார்.
உலக பல்கலைக்கழக தராதரத்திற்கு அமைய 15 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் இருப்பது அவசியமாகும்.
கலைத்துறை மாணவர்கள்
புதிய கல்வி திருத்தத்தின் கீழ் கலைத்துறை மாணவர்களுக்கு விஞ்ஞானத்துறையில் கற்று விஞ்ஞானமானி பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.