பிரித்தானியாவில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முதலாம் வருட நினைவு இன்று(8) கடைப்பிடிக்கபடுவதை முன்னிட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் நினைவு குறிப்பு செய்தியை பதிவிட்டுள்ளார்.
இந்தச் செய்தியுடன் கூடவே மறைந்த ராணிக்கு விருப்பமான நிழற்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் எலிசபெத்தின் மரணம்
சூரியன் அஸ்தமிக்காத பேரரசு என ஒருகாலத்தில் விளிக்கப்பட்ட பிரித்தானிய சாம் ராஜ்யத்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் கடந்த வருடம் இதே நாளில் உலகளாவிய ரீதியில் கவனத்தை பெற்றிருந்தது.
பிரித்தானிய முடியாட்சி வரலாற்றில் 25 வயதில் அரியணை ஏறி எந்த ஒரு மன்னரோ அல்லது ராணியோ ஆட்சிபுரியாத வகையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக முடியாட்சி செய்தவர் எலிசபெத் ராணி.
கடந்த வருடம் செப்ரெம்பர் 8 இல் ஸ்கொட்லாந்தில் பல்மோரல் கோட்டையில் தனது 96 வயதில் மரணமடைந்திருந்தார்.
கடந்த வருடம் யூன் மாதத்தில் தனது அரியணை வாழ்வின் 70 ஆம் ஆண்டு நிறைவை பிளட்ரினம் யுபிலி என்ற அடையாளத்தில் கொண்டாடிய எலிசபெத் ராணி அந்த கொண்டாட்டங்கள் இடம்பெற்று 3 மாதங்களில் மரணமடைந்திருந்தார்.
ராணிக்கு விருப்பமான புகைப்படம்
இன்றைய நாளை முன்னிட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் நினைவு குறிப்பு செய்தியுடன் மறைந்த ராணிக்கு விருப்பமான புகைப்படத்தை வெளியிட்டார்.