Loading...
ஐக்கிய தேசியக் கட்சியின் 56ஆவது மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு குறித்த மாநாடு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
குறித்த மாநாடு நாளை இடம்பெறவிருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொறிமுறையை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடு கடந்த 6ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...