உயர்தரத்தில் கணித பாடத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவன்,பெறுபேறு கிடைத்து இரண்டு நாட்களில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெல்லவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட தோராய ரணவன பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய ஆர்.ஜி.மனுஜய ஹன்ஸ்மல் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.
வீட்டில் உறங்கி கொண்டிருந்தவேளை
குறித்த மாணவன் கடந்த வியாழக்கிழமை வீட்டில் உறங்கி கொண்டிருந்தவேளை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது உயிரிழப்பிற்கு இதயநோயே காரணமென காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெறுபேறுகளின் அடிப்படையில்
உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் இரண்டாவது தடவை தோற்றிய குறித்த மாணவன் வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் மூன்று B சித்திகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது மரணம் அவர் வாழ்ந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.