ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் புதுப்புது ஆப்பிள் சாதனங்களை வியக்கத்தகு அம்சங்களுடன் வெளியிட்டு வருகிறது.
அறிமுகமாகும் புதிய சாதனங்கள்
அந்த வகையில் இம்மாதம் புதிய ஐபோன்களையும், ஆப்பிள் கைக்கடிகாரங்களையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி செப்டம்பர் 12ம் திகதி இரவு 10.30 மணியளவில் இந்நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வரிசையில் ஐபோன் 15, 15 பிளஸ் வகை தொலைபேசிகள் ஏ16 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஐபோன் 15 புரோ மற்றும் 15 புரோ மேக்ஸ் வகைகளில் ஏ17 பயோனிக்(A-17 bionic) சிப்செட் இடம்பெற்றுள்ளதாகவும், ஐஓஎஸ் 17 (ios 17) இயங்குதளத்தில் இந்த வகைகள் இயங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தொழிநுட்ப வல்லுநர்களின் கூற்று
இந்த தொலைபேசிகள் ஆப்பிளின் நிகழ்வில் அறிமுகமாகிறது. டைப்-சி (type-c) சார்ஜிங் போர்ட் இந்த சாதனங்களில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தோடு ஆப்பிள் கைக்கடிகாரம் சீரிஸ் 9, ஆப்பிள் கைக்கடிகாரம் அல்ட்ரா 2 மற்றும் ஐஓஎஸ் இயங்குதள அப்டேட் இந்த நிகழ்வில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக தொழிநுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.