Loading...
மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று (சனிக்கிழமை) 6.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் மராகேஷ் உட்பட பல நகரங்களை பாதித்துள்ளதோடு சுமார் 1,400 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Loading...
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பிற உதவிகளை வழங்க அரசாங்கம் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தை அடுத்து மொரோக்கோ நாட்டின் மன்னர் ஆறாம் முகமது மூன்று நாட்கள் தேசிய துக்கத்தையும் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
Loading...