Loading...
இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது மூன்றாண்டு பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால், பிரியாவிடை நிகழ்வுகளில் தற்போது பங்கேற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவர் வீடு திரும்புவதற்கு முன்னர் தாம் ஏற்கனவே சந்தித்த இந்தியாவின் மூத்த அரசு அதிகாரிகள், சகாக்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Loading...
அந்த வகையில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, கடந்த செவ்வாய்க்கிழமை தமது இல்லத்தில் மொரகொடவுக்கு பிரியாவிடை விருந்து அளித்துள்ளார்.
அதேநேரம் ஏனைய அதிகாரிகளும் மொரகொடவுக்கு பிரியாவிடை அளித்து வருகின்றனர்.
Loading...