Loading...
இலங்கை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக்கூடிய நாடு என்றவகையில், அண்மைகாலமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.
அவ்வகையில், இந்த வருடத்தில் இதுவரை ஒன்பது இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Loading...
ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 136,405 எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியான அதிகரிப்பு
இம்மாதம் கடந்த 06 நாட்களில் மாத்திரம் 22,896 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Loading...