திருமணம் முடித்து ஒரு வாரமே ஆன நிலையில் விபத்தில் சிக்கி கணவனும் மனைவியும் பலியான துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் ஹம்பாந்தோட்டை , வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் (10) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் திருமணம்
கடந்த வாரம் திருமணம் முடித்த இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளனர்.
இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதிக்கு அருகில் இருந்த மரமொன்றுடன் மோதி, இவ்விபத்து ஏற்பட்டது.
இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 31 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலும், பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற 28 வயதுடைய மனைவி வைத்தியசாலையிலும் உயிரிழந்தனர்.
மேலதிக விசாரணை
இருவரும் வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.