ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் பொறுப்பை ஏற்று மனந்திருந்தினால் அவர்களை மன்னிக்க முடியும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் இனக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வந்து தங்களின் தவறுகளுக்கு மன்னிப்பு கோரியதை அடுத்து ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அன்று மன்னிப்பு வழங்கியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோன்றே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மனந்திரும்பினால் அவர்களை மன்னிக்க தாம் தயாராக இருக்கிறோம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.
அத்தோடு தாக்குதலுக்கு காரணமானவர்கள் என குற்றம் சாட்டப்படுபவர்கள் தாங்கள் வகிக்கும் பதவியை இராஜினாமா செய்து நேர்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேர்மை என்பது அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதில்லை என சுட்டிக்காட்டிய பேராயர் உண்மையை ஏற்றுக்கொள்ள ஒருவர் பயப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.