பொலிஸ் அதிகாரிகள் போன்று போலியான நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சோதனைகளை அனுமதிக்க வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் மக்களுக்கு அறிவித்துள்ளது.
மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்
தம்மை பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் பொரளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய குறித்த பெண் கல்கிஸ்ஸை பகுதியிலுள்ள தனியார் காப்புறுதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பெண் முறைப்பாட்டாளர்களிடம் இரண்டு சந்தர்ப்பங்களில் பணத்தை பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போலி ஆவணங்கள்
அத்துடன் சந்தேகநபரான குறித்த பெண் போலி அடையாள அட்டை மற்றும் பொலிஸ் தலைமையகத்தின் முகவரியில் தயாரிக்கப்பட்ட போலி ஆவணம் என்பவற்றின் படங்களை வாட்ஸ்அப் மூலம் முறைப்பாட்டாளர்களுக்கு அனுப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.