Loading...
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.15 மணியளவில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
Loading...
78ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டத்தொடரில் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளதோடு உலகத் தலைவர்கள், உலகளாவிய சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் விவாதிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...