”அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்” என மீனவர்களுக்கு ஆளுநர் செந்தில் செந்தில் தொண்டமான் அறிவுரை வழங்கியுள்ளார்.
திருகோணமலையில் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் மீனவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மீனவ சங்கத்தினர், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்த கூடாது எனவும், சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுபவருக்கு எதிராக மீன்பிடி திணைக்களம்,கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.