Loading...
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெனீவாவில் ஐ.நா. செயலாளர் நாயகத்தை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோது இதற்கான அழைப்பை விடுத்ததாகவும், ஐ.நா. செயலர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...
ஐ.நா. செயலாளர் நாயகமாக அந்தோனியோ குட்டெரஸ் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இலங்கை விஜயமாக இது அமையும்.
Loading...