பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடுகளுக்கு வந்து மேற்கொள்ளப்படும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடுகளை சோதனையிடும் நபர்கள் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிஐடி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு என கூறிக்கொண்டு சிவில் உடையில், இவ்வாறான சோதனை நடவடிக்கையில் தாம் ஈடுபடுவதில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேடுதல் நடத்த முன்னர், அவர்களிடம் பொலிஸ் அடையாள அட்டையை கோருமாறும் இதற்கு பொது மக்களுக்கு அதிகாரம் இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சோதனைக்கு முன்னர் பொதுமக்களுக்கு அறிவிப்போம் என்றும் இது தொடர்பாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் வீட்டுக்கு அவ்வாறு வருபவர்கள் தொடர்பாக சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.