ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு தற்சமயம் வழங்கப்படும் 9 சதவீதமான நன்மைகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இலங்கை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்மூலம் ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு நெருக்கடி ஏற்படமாட்டாது.
கடன் மறுசீரமைப்பு
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.
வங்கிகளிடமிருந்து 30 சதவீத வரியை அறிவிடும் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.
வட்டிவீதங்கள்
கடன் மறுசீரமைப்பு நடைமுறையின் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டிவீதங்கள் குறைக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.