இந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் உணவகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அவர்களின் தொழில்களுக்கு ஏற்ற வேலைகள் கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், பல மருத்துவ வல்லுநர்கள் வெளிநாடுகளில் மருத்துவ துறை சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது அறியப்பட்டுள்ளது.
தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு
நாட்டின் பொருளாதார நிலைமையினால் ஏற்பட்டுள்ள துன்பங்களை போக்குவதற்கு மேலும் பல தொழில் வல்லுநர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவுக்குப் பிறகு வெளிநாடுகளுக்கு தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறப்பு மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.