தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 70 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மதுரட்டாவின் ஹெவாஹட்டா ராக்வுட் தோட்டப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது நேற்று(16) ஒகந்தகல கல் மலையின் அடிவாரத்தில் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 6ம் திகதி முதல் இந்த பெண் காணாமல் போயுள்ளதாக அவரது மகன் ஹகுரன்கெத்த காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதன் பின்னர் காணமல் போன பெண்ணை தேடும் நடவடிக்கையில் பிரதேசவாசிகள் ஈடுபட்ட போது தலை மற்று இடது கை பிரிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.
மேலும் சடலம் மீட்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்ந பயணப் பை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை மற்று இடதுகை காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹகுரன்கெத்த காவல்துறையினர் இது ஒரு கொலை என முடிவு செய்துள்ளதுடன் சந்தேக நபர்கள் தொடர்பான இந்த தகவல் இன்னும் கிடைக்க வில்லை என தெரிவித்துள்ளனர்.
குறித்த கொடூர சம்பவம் தொடர்பில் ஹகுரன்கெத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.