இன்றைய உலகில் விண்வெளி ஆராய்ச்சிகளின் உச்சபட்ச இலக்கு என்பது, பூமியை போல மனிதன் வாழ்வதற்கான மற்றுமொரு பிரபஞ்சம் உள்ளதா என்பதனை கண்டறிவதாகும்.
இதனை அடிப்படையாக கொண்டே ஏலியன் என சொல்லப்படும் வேற்றுகிரகவாசிகள், யூ.எப்.ஒ எனப்படும் பறக்கும் தட்டுக்கள் என்பன பூமிக்கு வந்து சென்றதாக கூறப்பட்டு வருகிறது.
இதுகுறித்த ஆராய்ச்சிகளை ஒவ்வொரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு மேற்கொண்டு வருகிறது.
ஏலியன்களின் சடலம்
இந்நிலையில் மெக்சிக்கோ நாடாளுமன்றத்தில் முதல்முறையாக, அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்களின் சாத்திய கூறுகள் குறித்த விசாரணை நடைபெற்றது.
அதில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏலியன்ஸ்களின் சடலங்கள் என்று நம்பப்படும் 2 உருவங்கள் பொதுமக்களுக்கு காட்டப்பட்டன.
மேலும் இந்நிகழ்வு நாடாளுமன்றத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுருங்கிய தலை, சிதைந்த உடல், 3 விரல்களை கொண்ட கைகள் என வித்தியாசமாக அவ்வுருவங்கள் காணப்பட்டன.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வேற்றுகிரக வாசிகளின் சடலங்கள் 2017ஆம் ஆண்டு பெருவில் உள்ள புஸ்கோவில், டையட்டம் பாசி சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக, பத்திரிகையாளர் ஜெய் மோசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வகை உயிரினங்கள் பூமியில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் நிலவவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.