தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் தெரிவித்துள்ளார்.
பொத்துவிலில் இருந்து நல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவம் தாங்கிய ஊர்தி மீது நேற்று முன்தினம் (17) மாலை, திருகோணமலை – கப்பல்துறையில் வைத்து இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸார் சூழ்ந்திருக்கும் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
தாக்குதல் நடவடிக்கை
இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது பொலிஸார் அதனை தடுக்க முற்படாது பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சர்வதேச சமூகம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்த வேண்டும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.