நாட்டில் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலையால் மண்சரிவு அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
நேற்று (20.09.2023) பெய்த கடும் மழை காரணமாகவே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்களுக்கு எச்சரிக்கை
இதன்படி, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொடை, அகலவத்தை, மத்துகம, வல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதல் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மலையக பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையேற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.