கேகாலை அவிசாவளை வீதியில் அவிசாவளை மேல் தல்துவ மர வேலைப்பாடு பட்டறைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு 11.15 அளவில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் அவிசா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
அத்துடன், உயிரிழந்தவர்கள் அவிசாவளை தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 27 வயதுடையவர்களாவர்.
மேலும், அதே முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து அவிசாவளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அவிசாவளை பொலிஸார்
காயமடைந்த இருவரும் அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 43 மற்றும் 42 வயதுடையவர்கள்.
இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர்கள் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்