காலிஸ்தான் செயற்பாட்டாளர் கொலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகியவை கனடாவுக்கு ஆதரவு அளிக்கத் தயக்கம் காட்டி வருகின்றன.
அத்துடன் கனடா உள்ளிட்ட குறித்த 5 நாடுகளும் பைவ் ஐ அலையன்ஸ் என்ற பெயரில் உளவுத் தகவல்களைத் தங்களுக்குள் பகிர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடா – இந்தியா இடையிலான மோதல் போக்கை ஏனைய நாடுகள் விரும்பவில்லை எனவும் கனடா பிரதமர் இந்தியா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள நிலையிலும், குறித்த விடயத்தில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானின் ஐ.எஸ்.;ஐ. உளவு அமைப்புடன் தொடர்புடையவர்களும் கனடாவில் தஞ்சமடைந்துள்ளதாகவும், இவர்களினால் உலகின் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் முன்னதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.