உலக உணவுத் திட்ட(WFP) அமைப்பின் மூலம் இலங்கையிலுள்ள தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் திரிபோஷ வழங்க அமெரிக்கா ஆதரவளித்துள்ளது.
திரிபோஷ உணவுத் திட்டத்தைத் தொடர்வதற்கு ஆதரவாக, 4,700 மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் மற்றும் சோளங்களை சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிலையமானது ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
திரிபோஷா திட்டம்
ஐக்கிய நாடுகளின்(WFP)அமைப்பானது இலங்கையிலுள்ள திரிபோஷ தொழிற்சாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் குறித்த மூலப்பொருட்கள் கையளித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் (WFP) அமைப்பின் அவசர நடவடிக்கைக்கு அமெரிக்காவிடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்களின் பரந்த பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த மூலப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலும் உலகளவிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக, உணவு பாதுகாப்பற்ற இலங்கை குடும்பங்களுக்கு பணம், உணவு உதவி மற்றும் பற்றுச்சீட்டுகளை வழங்குவதற்கு (WFP)அமைப்பிற்கு அமெரிக்கா உதவியுள்ளது.
அதேவேளை பாடசாலை உணவு மற்றும் திரிபோஷா – வலுவூட்டப்பட்ட கலப்பு உணவு தயாரிப்பு உட்பட தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களை அமெரிக்கா ஆதரிப்பதாக தெரிவி்த்துள்ளது.