ஒரு மாதகால போராட்டத்தின் பின்னர் பிலவுக் குடியிருப்பு மக்கள் தமது சொந்த மண்ணில் காலடி எடுத்துவைத்துள்ளனர்.
நேற்றைய தினம் இன்று 11.00 மணியளவில் மக்களிடம் காணிகள் ஒப்படைக்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை மக்களிடம் நீங்கள் உங்களது சொந்த இடங்களுக்குச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் பிரதான நுழைவாயில் திறந்துவிடப்படாது விமானப்படையினர் காவல்காத்து வந்தனர்.
இந்நிலையில் பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தற்சமயம் பிலவுக்குடியிருப்புக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் திறந்து விடப்பட்டுள்ளது.
எனினும் பிலவுக்குடியிருப்பிலுள்ள 54 குடும்பங்களின் காணியில் 8 குடும்பங்களின் காணிகள் தற்பொழுது விடுவிக்கப்படாது என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஏனைய எட்டுக்கு குடும்பங்களின் காணிகள் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடருமென பிலவுக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.