போலி ஆயுதங்களை காட்டி ரஷ்ய வீரர்களை உக்ரைனிய ராணுவ வீரர்கள் பின்வாங்க வைத்த சம்பவம் நடந்து இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் செவாஸ்டோபோலில் உள்ள கருங்கடல் கடற்படை தலைமையகத்தை உக்ரைனிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது.
இதில் 9 பேர் வரை கொல்லப்பட்டதோடு 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலியான ஆயுதங்கள்
இந்தநிலையில், உக்ரைனிய பகுதிக்குள் அத்துமீறி முன்னேறும் ரஷ்ய வீரர்களை தடுத்து நிறுத்துவதற்காக இரும்பு, பழைய மரம், டயர்கள் போன்றவற்றை கொண்டு போலியான ஆயுதங்களை தயாரித்து போலி ஆயுத குவியல்களை உக்ரைனிய வீரர்கள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த போலி ஆயுத குவியல்களை நிஜமான ஆயுத குவியல் என நினைத்து ரஷ்ய வீரர்கள் பின் வாங்கியுள்ளனர். இதனால் உக்ரைன் போர் பாதிப்புகளில் இருந்து சிறிது தப்பி இருப்பதோடு பல வீரர்களின் உயிர்களும் தப்பியுள்ளது.
இதையடுத்து தங்களுடைய தந்திரமான உத்தி முன்வரிசையில் கைகொடுத்து இருப்பதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.