ஒருபகுதி காணிகள் இன்று விடுவிக்கப்பட்டிருந்த போதும், கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்கான தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அந்த மக்களின் போராட்டம் செய்யும் இடத்திற்கு சென்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் போது தொடர்ந்தும் தமது கட்சியின் சார்பில் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக அவர் தெரிவித்திருந்தார்.
தமது பூர்வீக நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கும் மக்கள் நிலங்கள் மீட்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டு கேப்பாபுலவு பிரதாக இராணுவ முகாம் வாயில் அருகே தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.