அமெரிக்காவிற்கு அச்சுறுத்துலாக சீனா மாறி உள்ளதாகவும், அந்நாடு போருக்கு தயாராகி வருவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே கூறியுள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் உள்ள நிக்கி ஹாலே இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த அரை நூற்றாண்டாக அமெரிக்காவை தோற்கடிக்க, சீனா சதி செய்து வரும் நிலையில்,அந்நாட்டை எதிர்கொள்ள வலிமையும் மற்றும் பெருமையும் முக்கியம் என்றும் குறிப்பி்ட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல்
நமது வர்த்தக இரகசியங்களை சீனா எடுத்து கொண்டுள்ளது. மிகவும் பின் தங்கிய நாடாக இருந்த சீனா தற்போது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா மாறி உள்ளது.
அமெரிக்காவை அச்சுறுத்தவும், ஆசியாவை தாண்டி ஆதிக்கம் செலுத்தும் வகையில் இராணுவத்தை சீனா கட்டமைத்து வருகின்றது.
அமெரிக்க இராணுவத்திற்கு இணையாக தனது இராணுவத்தை அந்நாடு மேம்படுத்தி உள்ளதுடன், சீனா போருக்கு தயாராகி வருவதாகவும் அறிவித்துள்ளார்.