Loading...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், உள்ளூர் சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து ஊழல் எதிர்ப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் நிர்வாகமும் பொருளாதார சீர்திருத்தங்களும் கைகோர்த்து செல்ல வேண்டும் என்று தூதுவர் x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Loading...
மேலும், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல், இலங்கை மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை சத்தித்து ஜூலி சுங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஊழல் எதிர்ப்பு பிரச்சினைகள்
சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய மற்றும் கையாளப்பட வேண்டிய முக்கிய ஊழல் எதிர்ப்பு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார்.
Loading...