பொதுவாக பெண் பார்க்க, மாப்பிள்ளை பார்க்க ஜோதிடரிடம் சென்றால் இதை நாம் கேட்டிருப்போம். ஒரே இராசியில் இருக்கும் ஆண், பெண் திருமணம் செய்துக் கொள்ள கூடாது என்பார்கள். இவர்கள் மத்தியில் பிரச்சனை அதிகமாக காணப்படும், பிரிந்துவிடுவார்கள் என பொதுவாக கூறுவார்கள்.
ஆம், ஒரு சில இராசி உடைய ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வர தான் செய்யும். ஆனால், ஒருசில இராசிகள் சிறந்த ஜோடியாக திகழவும் வாய்ப்புகள் உள்ளன…
மேஷம் – மேஷம்
நெருப்பும், நெருப்பும் சேர்ந்தால் எப்படி இருக்கும். அப்படி தான் இந்த ஜோடி திகழும். கண்டிப்பாக இவர்கள் உறவில் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கலாம். அடிக்கடி சண்டை சச்சரவு வந்துக் கொண்டே இருக்கும். இருவர் மத்தியில் அகம்பாவம் எட்டிப்பார்க்கும். இவர் மத்தியில் பொறுமை இருக்காது. தங்கள் பாதையை பார்த்துக் கொண்டே செல்ல நேரம் பார்த்து காத்திருப்பர்.
ரிஷபம் – ரிஷபம்
நிலத்தை ஆதாரமாக கொண்ட இந்த இராசி, இருவர் மத்தியில் நல்ல இணக்கம் உண்டாகும். இந்த ஜோடி சேர்ந்தே பணியாற்றும் திறன் கொண்டிருப்பார். ஒரே மாதிரியான கருத்து, வழி, ஐடியா, ஈடுபாடு கொண்டிருப்பார்கள். விளையாட்டு, சமையல், உதவும் குணம் போன்றவை ஒற்றுமையாக காணப்படும். ஒருவரை ஒருவர் ஊக்கவித்து செயற்படுவார்கள். வெற்றிகரமான ஜோடியாக திகழ்வார்கள்.
மிதுனம் – மிதுனம்
இருவர் மத்தியில் பெரிதாக ஈர்ப்பு இருக்காது. ஒருவர் ஈர்ப்புடன் செயற்பட்டாலும், ஒருவர் சமநிலை இன்றி காணப்படுவார். எனவே, ஒருவர் இன்னொருவரை ஊக்கவித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த ஜோடி இப்படி தான் இருப்பார்கள் என கணித்துக் கூற முடியாது.
கடகம் – கடகம்
இருவருமே உணர்ச்சிப்பூர்வமான குணம் கொண்டவர்கள். இவர்கள் மத்தியிலான உணர்ச்சி வெளிபாடு அதிகமாக இருக்கும். ஒருவர் மற்றொருவருடைய உணர்வை புரிந்து நடந்துக் கொள்வார்கள். ஆனால், அதிகப்படியான உணர்ச்சி வெளிப்பாடும் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கலாம்.
சிம்மம் – சிம்மம்
அனைவரும் பரிந்துரைக்க அச்சம் கொள்ளும் ஜோடி இது. இவருமே வெடிக்குண்டாக தான் இருப்பார்கள். ஒருவர் வெடித்தால் உடன் இருப்பவரும் வெடிப்பார். இதனால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கும். இவர்கள் மத்தியில் முன்கோபம், ஆதிக்கம் செலுத்துதல் பிரச்சனையாக அமையும். ஒருவருக்கு ஒருவர் மதிப்பு அளிப்பது, பொறுமைக் காப்பது மிக கடுமையாக இருக்கும்.
கன்னி – கன்னி
மேட் ஃபார் ஈச் அதர் என்பார்களே அதற்கு உதாரணமான ஜோடி இது. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை அதிகம் கொண்டிருப்பார்கள். இருவர் மத்தியில் ஈர்ப்பும், பிணைப்பும் அதிகமாக இருக்கும். ஒருவருடைய மேன்மைக்கு மற்றொருவர் பாடுபடுவர். உறுதுணையாக திகழ்வார்கள்.
துலாம் – துலாம்
தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வார்கள், வெளிப்படையாக நடந்துக் கொள்வார்கள். இது தான் இவர்கள் மத்தியில் இருக்கும் ஒரு சிறந்த குணமாக இருக்கும். ஒருவரிடம் ஒருவர் சரியாக பேசிக் கொள்ளாவிட்டால் இவர்கள் உறவு பிரிவை தேடி தான் செல்லும். ஆனால், இதயம் திறந்து பேசும் மனப்பான்மை இவர்கள் மத்தியில் இருந்தால் யாராலும் இவர்களை பிரிக்க முடியாது.
விருச்சிகம் – விருச்சிகம்
மர்மம், புதிரும் கலந்து காணப்படும். இவர்களது உறவு இடியும், மின்னலுமாய் இருக்கும். நம்பிக்கை, பொறாமை, சந்தேகம் போன்றவை இவர்களது உறவில் விரிசல் ஏற்பட செய்யலாம். இவர்கள் இருவர் மத்தியில் ஈர்ப்பும், கவர்ச்சியும் அதிகமாக இருக்கும். அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள். ஆனாலும் உறவில் பிரிவு வராது.
தனுசு – தனுசு
ஒருவருடன் ஒருவர் எப்படி நேரத்தை செலவழிக்க வேண்டும் என அறிந்த ஜோடியாக திகழ்வார்கள். ஆரோக்கியமான கருத்துக்கள் பகிர்ந்துக் கொள்வதில் சிறந்து விளங்குவார்கள். வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் உதவுவார்கள். மற்றவருடைய சுதந்திரத்தில் கை வைத்தால் பேராபத்து ஆகிவிடும்.
மகரம் – மகரம்
இது ஒரு சிறந்த ஜோடி என கூறலாம். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொள்வார்கள். உறவு சிறந்து காணப்படும். அவரவருக்கான இடத்தை கொடுப்பார்கள். மனம் திறந்து பாராட்டுவார்கள். ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.
கும்பம் – கும்பம்
ஒருவரை ஒருவர் சகித்துக் கொண்டு வாழும் திறன் கொண்டிருப்பார்கள். சிறந்த ஜோடி எனவும் கூற முடியாது, மோசமான ஜோடி எனவும் கூற முடியாது.
மீனம் – மீனம்
இரு வேறு பார்வைகள் ஒரே கனவை ஏந்தி பயணிக்கும். தனித்துவம் வாய்ந்த ஜோடியாக திகழ்வார்கள்.