யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் செல்லும் சிலர் தப்பி சென்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம் (27) இரவு சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் சோதனையிட முயன்ற போது , கடற்படையினர் கண்ணில் பட்டு படகில் இருந்த நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் ஒருவரை கடற்படையினர் மடக்கி பிடித்ததாக தெரிவித்தனர்.
3 கஞ்சா பொதிகள்
பிடிபட்ட நபரை படகின் அருகில் அழைத்து சென்று சோதனையிட்ட போது படகில் மூன்று உரப்பைகளில் கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
இதேவேளை மீட்கப்பட்ட 125 கிலோ கிராம் கஞ்சாவையும் கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.