Loading...
மாத்தறை – கொடகம-கஹவ புகையிரதக் கடவையில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த தொடருந்தில் கழிவுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது ஏற்பட்ட பாரிய விபத்தில் லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், லொறியில் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
Loading...
பாரிய விபத்து
இந்நிலையில் விபத்தில் லொறிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கொடகம-கஹவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Loading...