இந்தியாவில் சுதந்திர காலிஸ்தான் அமைப்பின் இரகசிய இடங்கள் என சந்தேகிக்கப்படும் இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் தொடர் தேடுதல்கள் மற்றும் முற்றுகைகளை நடத்தியுள்ளது.
ஏழு மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் உள்ள 53 இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் இந்தச் சோதனைகளின் போது கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் ஏராளமான எண்ணியல் சாதனங்களை கைப்பற்றப்படடதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் சார்பு குழுக்களுடன் தொடர்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் சுதந்திர காலிஸ்தான் அமைப்பின செயற்பாட்டளரான ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாமென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ குற்றஞ்சாட்டியதை அடுத்து தொடர்ந்து, கனடாவுடன் கடுமையான இராஜதந்திர மோதலில் இந்தியா ஈடுபடும் நிலையில் உள்ளுரில் இவ்வாறு சோதனைகள் நடத்தப்பட்ட செய்திகள் வந்துள்ளன.
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் டெல்லி மற்றும் சண்டிகர் ஆகிய ஒன்றிய பிரதேசங்களிலும் நடத்தப்பட்ட இந்த சோதனைகளின் போது கைது செய்யப்பட்டவர்களில் பலர் காலிஸ்தான் சார்பு குழுக்களுடன் தொடர்புடையர்கள் எனவும் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கனடா, மலேசியா, போர்த்துக்கல் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் செயற்பட்டுவரும் காலிஸ்தான் சார்பு அமைப்புகளுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.