சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு வரிச் சுமை மட்டுமே கிடைத்துள்ளது என தேசிய மக்கள் சத்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச கடன்களை மறுசீரமைக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரப்பட்ட போதிலும் எதிர்பார்க்கப்பட்ட உதவி கிடைக்கவில்லை.
இரண்டாம் தவணை கடனில் சந்தேகம்
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் கிடைக்கப் பெறுமா என்பது சந்தேகமே.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விலை அதிகரிப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிபந்தனைகளின் காரணமாக நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.