Loading...
இயற்கையான முறையில் நமது உடலில் கெட்ட கொழுப்புகளை கரைத்து தொப்பையை குறைக்க அருமையான பானம் இதோ!
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை பழம் – 1
- துருவிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
- வெள்ளரிக்காய் – 1
- புதினா – சிறிதளவு
- தண்ணீர் – 1/2 கப்
செய்முறை
வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, துருவிய இஞ்சி, கற்றாழை ஜூஸ் மற்றும் புதினா ஆகிய அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்து அதனுடன் 1/2 கப் தண்ணீரை கலந்தால், பானம் தயார்.
குடிக்கும் முறை
இந்த பானத்தை இரவு தூங்குவதற்கு முன் தினமும் குடித்து வந்தால், நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
Loading...
நன்மைகள்
இந்த பானத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், விட்டமின்கள் மற்றும் மினரல் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், இது நமது உடலின் மெட்டாலிபாசத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.
மேலும் இது உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையைக் குறைப்பதுடன் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் அற்புதமான தீர்வாக உள்ளது.
Loading...